கொரோனா தடுப்பு மருந்து நிறுவன அதிபர்களின் சொத்து மதிப்பு உயர்வு
கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பால் அந்த நிறுவனத் தலைவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்து உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மாடர்னா நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீபன் பான்சல், பயான்டெக் தலைவர் உகுர் சகின் ஆகியோர் அந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதாகப் பீப்பிள்ஸ் வாக்சின் அலையன்ஸ் என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.
தடுப்பு மருந்து தயாரிப்பால் பணக்காரர்கள் ஆன 9 பேரின் நிகரச் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாயாகும். இது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்குப் போதுமானதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Comments