எல்லையில் சீனா அமைத்துள்ள நெடுஞ்சாலையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?
அசல் கட்டுப்பாட்டு எல்லையில், அருணாச்சல் கிராமத்தை ஒட்டி சீனா அமைத்துள்ள புதிய நெடுஞ்சாலையால் , இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், உலகின் மிகவும் ஆழமான யர்லங் ஜாங்போ பள்ளத்தாக்கு வழியாக, 2 கிலோ மீட்டர் நீளமுள்ள மலைசுரங்கப் பாதையுடன் இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
எல்லையில் இருந்து உள் நகரங்கள் மற்றும் விமான நிலையங்களை விரைவாக இணைக்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இரு தரப்புக்கும் இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில், இந்த சாலையை ராணுவ நடவடிக்கைகளுக்காக சீனா பயன்படுத்த வாய்ப்புள்ளது என திபெத் விவகாரங்களை அறிந்த பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments