கறுப்பு பூஞ்சை பரவலை பெருந்தொற்றாக அறிவிக்குமாறு மாநில அரசுகளை சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்
கறுப்பு பூஞ்சை எனப்படும் பிளாக் ஃபங்கஸ் பரவலை பெருந்தொற்றாக அறிவிக்குமாறு மாநில அரசுகளை சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. மியூகார் என்ற பூஞ்சையால் உருவாகும் இந்த தொற்று மியூகோர்மைகோசிஸ் (mucormycosis) என்று அழைக்கப்படுகிறது.
கொரோனா தொற்று ஏற்பட்டு குணமானவர்கள் மத்தியில் இந்த கறுப்பு பூஞ்சை தொற்று காணப்படுகிறது. தலை, முகம், வாய் உள்ளிட்ட பகுதிகளில் பரவுகிற இந்த பூஞ்சையால் உயிரிழப்பு வரை ஏற்படும்.
குறிப்பாக சர்க்கரை நோய் இருந்து, கொரோனா வந்து குணமானவர்களுக்கு இது அதிகம் பரவுவதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் இதுவரை 1500 பேருக்கு இது பரவியதில் 90 பேர் இறந்து விட்டனர். பல்வேறு மாநிலங்களில் கறுப்பு பூஞ்சை பரவுவதால் அதை பெருந்தொற்றாக அறிவித்து சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
Comments