கொடுத்ததெல்லாம் கொடுத்தான்... கொரோனா மையத்தில் மெல்லிசை கச்சேரி...!
வாணியம்பாடி ஜனதா புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சித்தமருத்துவ சிகிச்சை மையத்தில் நோயாளிகளின் மன இறுக்கத்தை போக்கும் விதமாக சித்தமருத்துவரின் ஆலோசனைப்படி சிரிப்பு யோகா மற்றும் இன்னிசை கச்சேரி நடத்தப்பட்டது.
கொடுத்ததெல்லாம கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் என்று நாட்டில் பரவி வரும் கொரோனா சிச்சிவேசனுக்கு தகுந்தாற்போல சிலர் இசையுடன் பாட.... பலர் கைதட்டி ரசித்துக் கொண்டிருக்கும் இந்த இடம் வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம் தனியார் மெட்ரிக் பள்ளியின் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சித்தமருத்துவ சிறப்பு சிகிச்சை மையம்.
கடந்த முறை தடுப்பு உடை அணிந்து நோயாளிகளுடன் நடனமாடி உற்சாகப்படுத்திய சித்தமருத்துவர் விக்ரம் கொடுத்த ஐடியாபடி கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்க, நகைகடை உரிமையாளர் கோபி என்பவரின் ஏற்பாட்டில் அங்கு இன்னிசை கச்சேரி களைகட்டியது
முககவசம் அணிந்து இசைமழை பொழிய எதிரே சமூக இடைவெளியுடன் அமர்ந்திருந்த கொரோனா நோயாளிகள் கைதட்டி ரசித்தனர்
தொடர்ந்து அவர்களுக்கு வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் சிரிப்பு யோகாவும் கற்றுக் கொடுக்கப்பட்டது. எலோரும் கோரஸாக மனம் விட்டு சிரித்து தங்கள் மனவலியை போக்கிக்கொண்டனர்
இந்த சித்தமருத்துவ சிகிச்சை மையத்தில் 3 வேளை உணவுடன், சித்தமருந்துகள் மூலிகை கசாயம் போன்றவை இலவசமாக வழங்கப்படுகின்றது. லேசான கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சை மையம் விரைவாக குணமடைய செய்வதாக கூறப்படுகின்றது. கொரோனா நோயாளிகள் தோற்று பாதிக்கப்பட்டுவுடன் இங்கு சிகிச்சைக்கு சேர்ந்தால் எளிதாக குணமடைந்து செல்வதாக சித்த மருத்துவர் விக்ரம் தெரிவித்தார்.
பொதுவாக கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை பொறுத்தவரை சளி நுரையீரலை தாக்கி மூச்சுத்தினறலை ஏற்படுத்துவதாகவும், முன் எச்சரிக்கையாக நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவுகளை எடுத்துக் கொண்டால் கொரோனா நோயில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்று சுட்டிக்காட்டுகின்றனர் மருத்துவர்கள் .
கொரோனா பீதியில் இருந்து சித்தமருத்துவர்கள் சொல்லிக் கொடுக்கும் சிரிப்பு யோகாவும் இந்த இன்னிசை கச்சேரியும் நோயாளிகளை மீட்டெடுக்கும் என்பதில் அய்யமில்லை.
Comments