கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து தமிழகத்திற்கு அதிகம் வழங்க வேண்டும் : மத்திய அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தல்

0 3301

நாட்டில் கருப்பு பூஞ்ஜை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை குணப்படுத்த கொடுக்கப்படும் மருந்துகளான லிப்போடாமால் ஆம்போடெரிசன் ஐ தமிழகத்திற்கு அதிகளவில் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய ரசாயன துறை அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்று  குணமாகும் நோயாளிகளை தாக்கும் கருப்பு பூஞ்ஜை பாதிப்பை, குணப்படுத்துவதற்கான மருந்து தமிழகத்திற்கு மட்டுமல்லாது நாடெங்கிலும் கிடைக்கும் படி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அந்த மருந்து தயாரிப்பை அதிகரிக்க தேவையான ரசாயன மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய நிறுவனங்களுக்கு அனுமதித்துயளிக்கவும் கனிமொழி அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments