ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்தோருக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கக் கோரிய வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த அனைவருக்கும் பத்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மனுவில் கொரோனா பணிகளில் ஈடுபடும் காவல்துறையினருக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மைப் பணியாளர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்க உத்தரவிடக் கோரியுள்ளார்.
நாளிதழ், தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கும், ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த அனைவருக்கும் பத்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடக் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு இது குறித்துத் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தது.
Comments