கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு
தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொரோனா பரிசோதனை எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனை மற்றும் முகாம்களில் இலவசமாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தனியார் ஆய்வகங்களில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்வோருக்கான கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் ஆயிரத்து 200ரூபாயில் இருந்து தொள்ளாயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் 800ரூபாயில் இருந்து 550 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
தனியார் ஆய்வகங்களில் குழுவாக சென்று கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கான கட்டணம் 600 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக குறைக்கப்படுகிறது. வீட்டிற்கு நேரடியாக சென்று ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் மேற்குறிப்பிட்ட தொகையுடன் கூடுதலாக 300 ரூபாய் வசூலித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments