”இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தால் கொரோனா பரவவில்லை” -மத்திய தொலைத்தொடர்புத்துறை திட்டவட்டம்
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தால் கொரோனா பரவவில்லை என தொலை தொடர்புத்துறை திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து பேசிய தொலைத்தொடர்பு துறை அதிகாரி 5ஜி தொழில்நுட்பத்திற்கும் கொரோனாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். செல்போன் கோபுரங்களில் 5ஜி தொழிநுட்பம் சோதனை தொடர்பாக வெளியாகும் தகவல்கள் தவறானவை என்றும் 5ஜி இணைப்பு சோதனை இந்தியாவில் எங்கும் தொடங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
5ஜி தொழில்நுட்பத்தால்தான் இந்தியாவில் கொரோனா பரவுகிறது என வாட்ஸப்,முகநூல் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றில் போலியான தகவல் ஒன்று அரியானா, பஞ்சாப், பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments