புது தகவல்கள், நிகழ்வுகள் வரும் வரை ஜக்கி வாசுதேவ் மற்றும் ஈஷா குறித்து பேசமாட்டேன் - அமைச்சர் தியாகராஜன்
இனி புது தகவல்களோ, நிகழ்வுகளோ வரும் வரை ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரது ஈஷா அறக்கட்டளை குறித்து எதுவும் பேசப்போவதில்லை என்று நிதி அமைச்சர் தியாகராஜன் கூறியுள்ளார்.
முன்னதாக ஜக்கி வாசுதேவ் தொடர்ச்சியாக சட்டமீறல்களை செய்யக்கூடியவர் என்றும் அவர் மீது விரைவிலோ பின்னரோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தியாகராஜன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ட்விட்டரில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றப் பொதுக் கணக்குக் குழுவின் தணிக்கை அறிக்கையின் மூலம் தான் ஜக்கி வாசுதேவ் மற்றும், அவரது ஈசா அறக்கட்டளை விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதை அறிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு தனக்க இல்லை என்பதை தெரிந்து கொண்டதாகவும் தியாகராஜன் கூறியுள்ளார். எனவே தற்போது முதல் இனி எந்தவொரு நிகழ்விலும் தற்போதைக்கு ஜக்கி வாசுதேவ் குறித்து பேச விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments