திருமணத்திற்கு செல்வதற்கான இ-பதிவு முறையில் புதிய நடைமுறை அறிமுகம்

0 8787

திருமணத்திற்காக மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் இ-பதிவு மேற்கொள்ள புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இ-பதிவு முறையில் ஏராளமானோர் விண்ணப்பித்ததால், அவசர காரணங்களுக்கான பட்டியலில் இருந்து திருமணம் என்ற பிரிவு முதலில் நீக்கப்பட்டது.

தற்போது, மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் திருமண பத்திரிகையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் மட்டுமே இ-பதிவு செய்ய முடியும்.

ஒரு திருமண நிகழ்விற்கு ஒரே ஒரு முறை மட்டுமே இ-பதிவு செய்ய இயலும். பத்திரிகையில் உள்ள அனைவரது பெயரையும் இ-பதிவில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். தவறான தகவல்களை தந்திருந்தாலோ, ஒரு திருமண நிகழ்வுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இ-பதிவுகள் செய்திருந்தாலோ தொற்றுநோய் தடுப்புச் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments