18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் நாளை துவக்கி வைக்கிறார் முதலமைச்சர்
தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருப்பூரில் தொடங்கி வைக்கிறார்.
இதற்காக கொரோனா தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து தமிழக அரசு நேரடியாக 10 லட்சத்து 62 ஆயிரம் டோஸ் மருந்துகளை கொள்முதல் செய்துள்ளது. அவற்றில் 9 லட்சத்து 62 லட்சம் டோஸ் தமிழகம் வந்துள்ள நிலையில், அதில் 1 லட்சத்து 66 ஆயிரம் கோவாக்சினும், 7 லட்சத்து 96 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டும் ஆகும்.
மீதமுள்ள ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்து விரைவில் வந்து சேரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது தவிர 45 வயதுக்கு மேற்பட்டோருக்காக 2.72 லட்சம் டோஸ் மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments