டெல்லியில் குறையும் கொரோனா.. காலியாகும் படுக்கைகள்..!
டெல்லியில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், நிரம்பி வழிந்த மருத்துவமனைகளில், படுக்கைகளும், ஐசியூ க்களும் காலியாக வருகின்றன.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, மொத்தமுள்ள 14 ஆயிரத்து 805 படுக்கைகளில் நோயாளிகள் உள்ள நிலையில், 12 ஆயிரத்து 907 படுக்கைகள் காலியாக உள்ளன.
டிஆர்டிஓ மற்றும் இந்தோ-திபெத் காவல்படையினர் அமைத்துள்ள படுக்கைகளில் 50 சதவிகித த்திற்கும் மேலானவை காலியாக உள்ளன.
டெல்லியில், கடந்த செவ்வாய்க்கிழமை 4 ஆயிரத்து 482 பேருக்கு புதிதிக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த மாதம் 5 ஆம் தேதிக்குப் பிறகு இதுவே மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான தொற்று ஆகும். அதே நேரம் டெல்லியில் தொற்றில் இருந்து குணமடைவோர் சதவிகிதம் 94 புள்ளி 37 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
Comments