2020 - 2021 நிதியாண்டில் டாட்டா மோட்டார்சுக்கு 7600 கோடி ரூபாய் இழப்பு

0 1618
ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் மறுசீரமைப்புக்குச் செலவிட்டதால் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்துக்குக் கடந்த நிதியாண்டில் ஏழாயிரத்து 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் மறுசீரமைப்புக்குச் செலவிட்டதால் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்துக்குக் கடந்த நிதியாண்டில் ஏழாயிரத்து 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனின் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவரைக் கையகப்படுத்திய டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் அதைச் சீரமைக்கப் பெருந்தொகை செலவிட்டது. ஜனவரி முதல் மார்ச் வரையான நான்காம் காலாண்டில் விற்பனை அதிகரித்தாலும் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 76 கோடி ரூபாய் நிகர நட்டம் ஏற்பட்டது. மொத்தமாகக் கடந்த நிதியாண்டில் ஏழாயிரத்து 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனச் சீரமைப்புக்கு அதிகத் தொகையைச் செலவிட்டதே  லாபத்தைப் பாதித்துள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments