முன்பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பனை செய்யும் திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

0 2136
இணையதளத்தில் முன்பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவர் மருந்துகளை விற்பனை செய்யும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இணையதளத்தில் முன்பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பனை செய்யும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்க நோயாளிகளின் உறவினர்கள் கட்டுக்கடங்காமல் கூடியதால் தமிழக அரசு நேரடியாக மருத்தவமனைகளுக்கு அந்த மருந்துகளை விற்பனை செய்யும் இந்த திட்டத்தை துவக்கியுள்ளது. அதன்படி, நேற்று வரை ரெம்டெசிவிர் தேவை என 294 தனியார் மருத்துவமனைகள் இணையத்தில் பதிவு செய்துள்ளன.அவற்றில், 172 மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்து உடனடி தேவை என குறிப்பிட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதற்கட்டமாக 25 தனியார் மருத்துவமனைகளுக்கு 960 ரெம்டெசிவர் மருந்துகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கி திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments