கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிக்கப் பல நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட வேண்டும்-அமைச்சர் நிதின் கட்கரி
நாட்டில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிக்கப் பல நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
காணொலிக் கருத்தரங்கில் பேசிய அவர், தடுப்பு மருந்து உற்பத்தியைவிடத் தேவை அதிகரித்ததே சிக்கலுக்குக் காரணம் எனத் தெரிவித்தார். ஒரு நிறுவனத்துக்குப் பதில் பத்து நிறுவனங்களுக்கு மருந்து தயாரிக்கும் உரிமம் வழங்கினால் உள்நாட்டுத் தேவைக்கான மருந்துகளை உற்பத்தி செய்வதுடன், தேவைக்கும் அதிகமாக மருந்து உற்பத்தி இருந்தால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் எனத் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு மூன்று மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளதாகவும், 10 விழுக்காடு உரிமத் தொகை பெற்றுக்கொண்டு அவற்றை மருந்து தயாரிக்க அனுமதிக்கலாம் என்றும், இதை 20 நாட்களுக்குள் செய்துவிட முடியும் என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.
Comments