நோயாளிகளை கவனிப்போரால் தொற்றுப் பரவும் அபாயம்..!

0 3374

ரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுடன், உதவிக்காக இருக்கும் உறவினர்கள், தினசரி வெளியில் வந்து செல்வது தொற்றுப் பரப்பும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மருத்துவமனை நிர்வாகங்கள் முடுக்கிவிட்டுள்ளன.

லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருக்கும் நபர் மற்றும் குடும்பத்தினர் தனிமைப்படுத்தலுக்கான காலம் முடியாமல் வெளியில் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

அதேநேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் இரவு நேரங்களில் ஒருவர், பகல் நேரங்களில் ஒருவர் என ஷிப்ட் மாற்றி நோயாளிகளின் உறவினர்கள் உடன் இருந்து அவர்களைப் பார்த்துக் கொள்கின்றனர்.

பிறகு மருத்துவமனையில் இருந்து அப்படியே புறப்பட்டு வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்கின்றனர். அங்கிருந்து கடைகளுக்கும், மற்ற உறவினர்களின் வீடுகளுக்கு செல்கின்றனர். பிறகு மீண்டும் மாலையில் மருத்துவமனைக்கு திரும்பி நோயாளிகளுடன் இருந்து கவனித்துக் கொள்ளும் பணியை மேற்கொள்கின்றனர்.

இப்படி கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளுடன் பல மணி நேரம் தங்கியிருக்கக் கூடிய உறவினர்கள் வெளியில் வந்து செல்வதால் நோய் பரப்பி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வார்டுக்குள் செல்லும் நோயாளிகளின் உறவினர்கள் முக கவசம் மட்டுமே அணிந்துள்ளனர்.முழு உடலுக்கும் PPE kit கூட அணிவது கிடையாது. இவ்வாறு நோயாளிகளைக் கவனித்துக் கொள்வோர் மூலம் ஏற்படும் தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments