தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிக்கு மில்லினியம் டெக்னாலஜி பரிசு

0 4063
சென்னையை சேர்ந்த பிரிட்டிஷ் விஞ்ஞானியும், மெடிசினல் கெமிஸ்ட்ரி பேராசிரியருமான சங்கர் பாலசுப்பிரமணியனுக்கு டிஎன்ஏ தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்காக, பெருமைமிகு விருதான 2020 மில்லினியம் டெக்னாலஜி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அவருடன், டேவிட் கிளெனர்மேன் (David Klenerman) என்ற பிரிட்டிஷ் பயோகெமிஸ்டும் இந்த பரிசை கூட்டாக பெறுகிறார். Solexa-Illumina Next Generation DNA Sequencing (NGS), என்ற தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக ஒரு மில்லியன் யூரோ மதிப்பிலான இந்த பரிசு வழங்கப்படுகிறது. ஒரு உயிரினத்தின் செல் வடிவமைப்பு, அதன் முழுமையான டிஎன்ஏ மரபுவரிசை உள்ளிட்டவற்றை குறைந்த செலவில் மிகச்சரியாகவும் அதே நேரம் பெரும் எண்ணிக்கையிலும் கண்டுபிடிக்க இந்த தொழில்நுட்பம் உதவும்.

கொரோனா வைரசுடன் மனிதன் போரிடும் இந்த தருணத்தில் தமிழரான சங்கர் சுப்பிரமணியனின் இந்த கண்டுபிடிப்பு அதை எதிர்த்து ஒழிக்க மிகவும் உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments