திருப்பதி மலையில் கோல்டன் 120 பீட் தங்கச் சுரங்கம்..! திகிலில் திருப்பதி போலீசார்

0 124643

ங்க கோபுரத்துடன் ஜொலிக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள சேஷாசல மலைத் தொடரில் 120 அடி ஆழத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கச் சுரங்கம் இருப்பதாக மந்திரவாதி ஒருவர் சொன்ன வார்த்தையை நம்பி, கடந்த ஒருவருடமாக 80 அடி ஆழத்துக்கு சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டிய புதையல் திருடர்கள் ஆறு பேரை போலீசார் சுற்றிவளைத்துள்ளனர். செம்மரம் வெட்டுபவர்களை தேடிய போது மண்வெட்டியுடன் சிக்கிய பூதங்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

உலக பிரசித்திப்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள தடை செய்யப்பட்ட வனப்பகுதியான ஷேசாசலம் மலை தொடரில் செம்மரம் வெட்டும் கும்பலை பிடிக்க போலீசார் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்

அந்தவகையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், நெல்லூரை சேர்ந்த மக்கு நாயுடு என்பவர் அடிக்கடி அந்த மலை தொடரின் காட்டுப்பகுதியில் சம்பந்தமில்லாமல் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிவதை கண்டுபிடித்தனர். அவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்த அவர் தான் மரம் எல்லாம் வெட்டுவதில்லை மண்ணைத்தான் வெட்டுகிறேன் என்று கூறி போலீசாரை குழப்பினார்.

போலீஸ் நடத்திய முறையான விசாரணையில், தான் மந்திரவாதி ஒருவரை அழைத்து பூஜை செய்ததாகவும், அவர் சொன்னபடி இந்த மலையில் பல ஆயிரம் கோடிகள் மதிப்புள்ள தங்க சுரங்கம் ஒன்று 120 அடியில் இருப்பதை தெரிந்து கொண்டதாகவும், அத்தனை தங்கம் மற்றும் வைரத்தையும் அள்ளி எடுக்க வேண்டும் என்பதற்காக கூலிக்கு ஆட்களை வைத்து சுரங்கம் தோண்டிக் கொண்டிருப்பதாக கூறி காவல்துறையினரை மிரளவைத்தார்.

மக்கு நாயுடு அழைத்துச்சென்ற இடத்திற்கு வனத்துறையினருடன் விரைந்த போலீசார் மக்கு நாயுடுவும் அவரது கையாட்கள் 5 பேரும் சேர்ந்து தோண்டிய சுரங்கத்துக்குள் இறங்கி பார்த்து வியர்த்து விட்டனர்

ஷேசாசல மலையில் இருந்து சிறு துரும்பை துக்கிச்சென்றாலே கடுமையான தேச விரோதம் குற்றம் போல நடவடிக்கை எடுப்பதை ஆந்திர காவல்துறையினர் வழக்கமாக்கியுள்ள நிலையில் தினமும் கூலிக்கு 5 பேரை அழைத்துச்சென்று ஒரு வருடமாக சுரங்கம் தோண்டி போலீசாரையே கிடுகிடுக்க வைத்துள்ளார் மக்கு நாயுடு..!

எந்த அளவுக்கு போலீசாரின் ரோந்து பணியில் தொய்வு இருந்து இருந்தால் இப்படி ஒரு மிக நீண்ட சுரங்கத்தை வெறும் மண்வெட்டி கடப்பாறையால் தோண்டி இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தற்போது வரை 80 அடி தோண்டியாச்சி , இன்னும் 40 அடிதான் பாக்கி அதனை தோண்டியாச்சின்னா தங்க புதையல் கைக்கு வந்து விடும் என்று வரைபடமெல்லாம் போட்டு சோகத்துடன் தெரிவித்துள்ளார் மக்கு நாயுடு..!

ஷேசால மலைக்கு மேல இருக்கிற கோவிலில் உள்ள தங்கத்தை அபேஸ் செய்யும் திட்டத்துடன் இந்த நீண்ட குகையை தோண்டினார்களா ? என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ள போலீசார், 6 பேரை சுற்றிவளைத்துள்ள நிலையில், மக்கு நாயுடுவுக்கு தங்க சுரங்கத்துக்கு ரூட்டு போட்டுக் கொடுத்த மந்திரவாதியை பிடித்து வேப்பிலை அடிக்கும் திட்டத்துடன் அவரை தேடி வருகின்றனர்.

இந்த ஷேசாசல மலையில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தியதாக குற்றஞ்சாட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடதக்கது. இந்தமலையில் தான் ஒருவருடமாக சுரங்கம் தோண்டி போலீசாருக்கே போக்கு காட்டி இருக்கிறார் நெல்லூர் சபாஷ் நாயுடு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments