அரசின் இலவச சேவைக்கு கையூட்டு; மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை :தமிழக அரசு எச்சரிக்கை

0 2409
அரசின் இலவச சேவைக்கு கையூட்டு; மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை :தமிழக அரசு எச்சரிக்கை

ருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது மற்றும் அரசின் இலவச சேவைகளுக்கு பொதுமக்களிடம் கையூட்டுப் பெறுவது போன்ற மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

ஒருசில அரசு அலுவலர்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவனங்களை சார்ந்த சிலர், சட்டத்திற்கு புறம்பான இத்தகைய செயல்களில் ஈடுபடுவது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு வந்துள்ளதாகவும், அத்தகைய நபர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறு செய்யும் அலுவலர்கள் மீது பணிநீக்கம் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அரசுத்துறை செயலர்கள், காவல்துறையினருக்கு உத்தரவுகள் வழங்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments