அத்தியாவசிய பணிக்கும் இ-பதிவா? சென்னையில் குழப்பம்..!

0 7573
அத்தியாவசிய பணிக்கும் இ-பதிவா? சென்னையில் குழப்பம்..!

சென்னையில் விலக்கு அளிக்கப்பட்ட மருத்துவ பணியாளர்கள், ஊடகத்தினர் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களிடமும் இ-பதிவு கேட்டு போலீசார் வாகனங்களை நிறுத்தியதால் குழப்பம் ஏற்பட்டது.

சென்னை அண்ணா சாலையில் காலை 10 மணிக்கு மேல் இ-பதிவு வைத்திருந்த வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை காவல் எல்லைக்குள் ஒரு பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு செல்ல இ-பதிவு கட்டாயம் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

செல்லக்கூடிய இடம், எதற்காக செல்கிறீர்கள் என்பதை இணையத்தில் பதிவு செய்யவேண்டும். இதுவே இ-பதிவு முறையாகும். இந்த நடைமுறை பற்றி அறியாமல் வழக்கம்போல் வந்த வாகன ஓட்டிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஊடகங்கள், மருத்துவமனை பணியாளர்கள், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு இ பதிவில் இருந்து தமிழக அரசு விலக்கு கொடுத்துள்ளது.

ஆனால் இதனை புரிந்து கொள்ளாமல் அனைவரிடமும் இ-பதிவு கேட்டு போலீசார் கெடுபிடி காட்டியதால் அண்ணா சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

கொரோனா நோயாளிகள் அழைத்துச் செல்லப்படும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.

இது குறித்து கேட்ட போது, ஊரடங்கை தீவிரப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதிக்கப்பட்ட பணிகளை மேற்கொள்பவர்களும் இ - பதிவு பெற வேண்டும் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments