சிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூடும் - மத்திய அரசுக்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் எச்சரிக்கை
சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மரபணு மாற்ற வைரசால், இந்தியாவில் கொரோனாவின் 3 ஆவது அலை வீசக்கூடும் என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், மத்திய அரசை எச்சரித்துள்ளார்.
இந்த 3 ஆவது அலை குழந்தைகளுக்கும், சிறார்களுக்கும் மிகவும் ஆபத்தாக இருக்கும் என்பதால் சிங்கப்பூருக்கான விமான சேவையை உடனடியாக ரத்து செய்யுமாறு அவர் மத்திய அரசை வலியுறுத்தி இருக்கிறார்.
குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்கும் நேரம் வந்து விட்டதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கடந்த 29 ஆம் தேதி சிங்கப்பூரில் 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை ஒரு மாத காலத்திற்கு சிங்கப்பூர் அரசு விதித்துள்ளது.
Comments