"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கொரோனா பணிகளுக்கான முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நேற்று வரை ரூபாய் 69 கோடி நன்கொடை
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 17ந் தேதி வரை 69 கோடி ரூபாய் கொரோனா நிதி கிடைத்துள்ளது.
கொரோனா பேரிடரை எதிர்கொள்ள நன்கொடை அளிக்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல், உலகெங்கிலும் வாழும் தமிழக மக்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர்.
அதன்படி, இணையவழியாக 29கோடியே 44 லட்சம் ரூபாயும், நேரடியாக 39 கோடியே56லட்சம் ரூபாயும் என இதுவரை 69 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது.
இதிலிருந்து 25 கோடி ரூபாயை அரசு மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் வாங்கவும், வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் ஆக்சிஜன் மற்றும் கண்டெய்னர்கள் கொண்டுவருவதற்கு 25 கோடி ரூபாயும் ஒதுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Comments