கொரோனா நிவாரண தொகையை கொரோனா நிவாரணத்திற்கு அனுப்பிய தம்பதி

0 2532
கொரோனா நிவாரண தொகையை கொரோனா நிவாரணத்திற்கு அனுப்பிய தம்பதி

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ரேசன் கடையில் வாங்கிய கொரோனா நிவாரண தொகை 2 ஆயிரத்தை வயதான தம்பதியினர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு திரும்ப அனுப்பியுள்ளனர்.

சுக்காங்கல்பட்டி கிராமத்தில் வசித்து வரும் பழனிசாமி - ரத்தினம்மாள் தம்பதிக்கு கொரோனா நிவாரண தொகையாக ரேசன் கடையில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

இந்த பணத்தை பெற்றுக் கொண்ட தம்பதியினர், அதனை கூட்டுறவு சங்க செயலாளர் மூலம் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொரோனாவால் பலர் பாதிப்படைந்து வருவதால் இந்த தொகையை அனுப்பி வைத்துள்ளதாகவும், இது தங்களுக்கு மன நிறைவை தருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments