உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய பெர்னார்ட் அர்னால்ட்

0 2667
உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளிய பெர்னார்ட் அர்னால்ட்

லக பணக்காரர்களில் இரண்டாவது இடத்தில் இருந்த டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க்கை பெர்னார்ட் அர்னால்ட் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ப்ளூம்பெர்க்கின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திலிருந்த எலான் மஸ்க், தற்போது 160.6 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டுள்ளார்.

இது கடந்த ஜனவரி மாதத்தில் அவரிடமிருந்த சொத்துக்களிலிருந்து 24% குறைவாகும்.

மின்சார வாகன தயாரிப்புகளின் பங்குகள் 2.2% சரிந்ததுடன், டெஸ்லா நிறுவனம் பிட்காயின் பேமண்ட் முறையை நிறுத்துவதாக எலான் மஸ்க் கடந்தவாரம் அறிவித்ததையடுத்து டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிய தொடங்கியது.

இதுவே எலான் மஸ்க் பணக்காரர்கள் பட்டியலில் பின் தங்கியதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments