மரபணு மாற்ற வைரசுகள் சிறார்களை அதிகம் தாக்குவதாக சிங்கப்பூர் தகவல்
இந்தியாவில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் போன்ற மரபணு மாற்ற வைரசுகள் குழந்தைகளை அதிக அளவில் தாக்குவதால், பெரும்பாலான பள்ளிகளை மூட சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.
நாளை முதல் வரும் 28 ஆம் தேதி வரை அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நடத்தப்படும்.அத்துடன் சிறு வயதினருக்கு தடுப்பூசி போடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பி.1617 மரபணு மாற்ற வைரஸ் சிறார்களை அதிகமாக பாதித்துள்ளது என சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யே குங் (Ong Ye Kung) தெரிவித்தாலும், எத்தனை பேர் அதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.
Comments