தமிழகத்தில் இ-பதிவு பெறுவதற்கான காரணங்களின் பட்டியலில் திருமணம் என்ற பிரிவு மீண்டும் நீக்கம்

0 7681
தமிழகத்தில் இ-பதிவு பெறுவதற்கான காரணங்களின் பட்டியலில் திருமணம் என்ற பிரிவு மீண்டும் நீக்கம்

தமிழகத்தில் இ-பதிவு பெறுவதற்கான காரணங்களின் பட்டியலில் இருந்து திருமணம் என்ற பிரிவு மீண்டும் நீக்கப்பட்டுள்ளது.

திருமணம், இறப்பு, மருத்துவம், முதியோர் பராமரிப்பு உள்ளிட்ட அவசர பயணத்துக்காக மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு இ-பதிவு முறை கொண்டு வரப்பட்து.

இ-பதிவு முறையில் ஏராளமானோர் திருமணத்திற்காக விண்ணப்பித்ததால், அவசர காரணங்களுக்கான பட்டியலில் இருந்து திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டது.

இதனையடுத்து, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது.

இனிமேல், திருமணம் என்ற காரணத்தை கூறி மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் பயணிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments