சுடுகாடு செல்லும் வழியின் குறுக்கே தனிநபர் எழுப்பிய சுவர்..! இடித்து தள்ளிய பொதுமக்கள்

0 36488
சுடுகாடு செல்லும் வழியின் குறுக்கே தனிநபர் எழுப்பிய சுவர்..! இடித்து தள்ளிய பொதுமக்கள்

திருவள்ளூர் அருகே சுடுகாடு செல்லும் வழியின் குறுக்கே தனிநபர் ஒருவர் எழுப்பிய மதில் சுவரை பொதுமக்கள் கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் இடித்து தள்ளினர்

திருவள்ளூர் அருகே பூண்டி பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கு சொந்தமான இடம் வழியாக அப்பகுதியில் இறந்தவர்கள் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு அந்த தெருவின் முடிவில் அவர் குறுக்குச்சுவரை எழுப்பியதால், அவ்வழியாக சடலங்களை எடுத்துச் செல்ல முடியாத ஏற்பட்டது. அவ்வழியை பொதுப்பயன்பாட்டிற்கு தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டும் முயற்சி பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அப்பகுதியில் இறந்த முதியவரின் உடலைக் கொண்டு செல்வது தொடர்பாக, உலகநாதனிடம் பாதையைத் திறந்துவிடுமாறு கேட்டுள்ளனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து மதில் சுவற்றை இடித்து தள்ளினர். இதனால் உலகநாதனுக்கும் அப்பகுதி மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் பேசி தற்காலிக தீர்வு ஒன்றை ஏற்படுத்தினர். இதை தொடர்ந்து பல மணிநேரத்திற்குப் பின் உயிரிழந்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments