கொரோனாவின் கோரத் தாண்டவத்துக்கு 244 மருத்துவர்கள் உயிரிழப்பு
கொரோனா தாக்கத்தினால் இந்தியாவில் ஒரே நாளில் 50 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில், பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் 244 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டும் 50 மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பீகாரில் 69 மருத்துவர்களும், உத்தரப்பிரதேசத்தில் 34 பேரும், டெல்லியில் 27 பேரும் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.
இவர்களில் டெல்லியைச் சேர்ந்த டாக்டர் அனஸ் முஜாஹித் என்ற 25 வயது இளம் மருத்துவரும், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற 90 வயதான மூத்த மருத்துவரும் அடங்குவர் என இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments