கொரோனா நோயாளிகளுக்கு இனி பிளாஸ்மா சிகிச்சை கிடையாது; வழிகாட்டு நெறிமுறைகளில் இருந்து நீக்கியது மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்
கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சையை கைவிடுவதாக தேசிய கோவிட் பணிக்குழு அறிவித்துள்ளது.
மிதமான மற்றும் தீவிரமான கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பிளாஸ்மா சிகிச்சை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த சிகிச்சையில் போதிய பலன் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.
இதையடுத்து மருத்துவத்துறை ஆராய்ச்சியாளர்கள், மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினர். அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி பிளாஸ்மா சிகிச்சையை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சித் தலைவர் பல்ராம் பார்கவா மற்றும் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
Comments