வாட்ஸ்ஆப்பின் புதிய தனிநபர் கொள்கை அரசின் விதிகளுக்கு எதிரானது - மத்திய அரசு

0 4464
வாட்ஸ்ஆப்பின் புதிய தனிநபர் கொள்கை அரசின் விதிகளுக்கு எதிரானது - மத்திய அரசு

வாட்ஸ்ஆப்பின் புதிய தனிநபர் கொள்கையானது இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப (IT) சட்டங்களுக்கும், விதிகளுக்கும் எதிரானது என மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப்பின் புதிய தனிநபர் கொள்கைகளுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணையின் போது, வாட்ஸ்ஆப் தனி நபர் கொள்கையில் உள்ள பிரச்சனைகள் குறித்து அந்நிறுவன தலைமைக்கு மத்திய அரசு அனுப்பிய கடிதத்திற்கு தற்போது வரை பதில் எதுவும் வரவில்லை என்று வழக்கறிஞர் கூறினார்.

புதிய தனிநபர் கொள்கைகளை கடந்த 15 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தவதாக அறிவித்தாலும், இது வரை எவருடைய கணக்கும் நீக்கப்படவில்லை என வாட்ஸ்ஆப் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

புதிய கொள்கைகளை ஏற்காதவர்களின் வாட்ஸ் ஆப் கணக்குகளை நீக்குவதற்கு என்று தனியாக காலவரம்பு எதுவும் நிச்சயிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments