முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிக்கை

0 2333
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிக்கை

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என அதன் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அதிமுக தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த நிதி கொரோனா பெருந்தொற்றால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழக மக்களுக்கு, மருத்துவ வசதி மற்றும் உரிய நிவாரணங்களை வழங்க பயன்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அதிமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments