கொரோனா இறப்பு எண்ணிக்கையை நேர்மையாக வெளியிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

0 2531
கொரோனா இறப்பு எண்ணிக்கையை நேர்மையாக வெளியிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

கொரோனா மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும் என்றும், கொரோனாவால் இறந்தோர் உடல்களைக் கண்ணியமாக அடக்கம் அல்லது தகனம் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, ஆக்சிஜன் வழங்கல், ரெம்டெசிவிர் மருந்தை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பது குறித்த விபரங்கள் அடங்கிய அறிக்கையைத் தமிழக அரசு தாக்கல் செய்தது.

இதையடுத்து, நீதிமன்ற வளாகங்களை கொரோனா சிகிச்சை மையங்களாகவோ, தடுப்பூசி மையங்களாகவோ பயன்படுத்திக் கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்றும், கொரோனா இறப்பு விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்திய நீதிபதிகள், அப்போது தான் எதிர்காலத்தில் ஆக்சிஜன், மருந்து ஒதுக்கீடு பெற உதவியாக இருக்கும் எனச் சுட்டிக் காட்டினர்.

கொரோனாவால் இறந்தோர் உடல்களை உரிய விதிகளைப் பின்பற்றி அப்புறப்படுத்திக் கண்ணியமாக அடக்கம் அல்லது தகனம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments