வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் உள் மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 19-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு நீலகிரி, சேலம், தேனி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 13 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.
குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் அலை சுமார் இரண்டறை மீட்டர் உயரம் வரை மேல் எழும்பக்கூடும் என்பதால் அங்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments