கொரோனா சிகிச்சைக்குச் சித்த மருத்துவத்தை பின்பற்ற கூடாது - தருமபுரி திமுக எம்பி. செந்தில்குமார் எதிர்ப்பு

0 6328
கொரோனா சிகிச்சைக்குச் சித்த மருத்துவத்தை பின்பற்ற கூடாது - தருமபுரி திமுக எம்பி. செந்தில்குமார் எதிர்ப்பு

கொரோனா தொற்றைக் குணப்படுத்த சித்தமருத்துவத்தையும், நீராவி பிடித்தலையும் தமிழக அரசு பயன்படுத்துவதற்கு தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், முற்போக்கான பகுத்தறிவுக் கட்சியான திமுக ஆட்சியில்,  கொரோனா தொற்றைக் குணப்படுத்த அறிவியல் முறையில் மெய்ப்பிக்கப்படாத முறைகளைப் பயன்படுத்தும் செயல்களில் மனித வளத்தை வீணாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அறிவியல் ஆராய்ச்சி அடிப்படையிலான மருந்தைக் கண்டறிவதற்கு அரசு மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் சிறந்த மருத்துவர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை முதலமைச்சர் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments