ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சட்ட மீறல்களுக்கு விரைவிலோ, பின்னரோ தண்டிக்கப்படுவது உறுதி - தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்
ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் செய்துள்ள சட்ட மீறல்களுக்கு விரைவிலோ, பின்னரோ தண்டிக்கப்படுவது உறுதி எனத் தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இந்துக் கோவில்களை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என சத்குரு வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ஆங்கில நாளிதழுக்கு அமைச்சர் தியாகராஜன் அளித்த பேட்டியில் ஜக்கி வாசுதேவ் விளம்பர விரும்பி என்றும், அதற்காக இந்துக் கோவில்கள் விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு சத்குருவும் அவரது அறக்கட்டளையும் அரசுடன் இணைந்து மக்கள்நலப் பணிகளைச் செய்துவருவதாகவும், அரசுடன் ஒத்துழைத்து உதவி செய்வது தங்கள் இயல்பு என ஈசா அறக்கட்டளை பதிலளித்தது.
இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் தியாகராஜன், ஜக்கி வாசுதேவ் சட்ட விதிகளை மீறுபவர் என்றும், அதற்கு விரைவிலோ பின்னரோ தண்டிக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments