டவ்-தே புயல் - அமித் ஷா ஆலோசனை
டவ்-தே புயல் சூறாவளி காற்றுடன் குஜராத்தில் கரையை கடக்க உள்ள நிலையில், கோவா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா சிகிச்சையில் எந்த பாதிப்பும் வரக்கூடாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக தொடர்புடைய மாநில அதிகாரிகளுடன் அமித் ஷா காணொலியில் ஆலோசனை நடத்தினார். அப்போது மருத்துவமனைகளில் தடையற்ற மின்சாரம் மற்றும் ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.
புயல் கரையை கடக்கும் போது ஏற்படும் இயற்கை சீற்றங்களால், கொரோனா சிகிச்சை மையங்கள், தடுப்பூசி இருப்பு வசதிகள், தீவிர சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகள் ஆகியோரின் பாதுகாப்பு பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அமித் ஷா கேட்டுக் கொண்டார்.
ஆக்சிஜன் வசதிக்காக தற்காலிக மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளை உறுதியான கட்டிடங்களுக்கு மாற்றுமாறு அவர் உத்தரவிட்டார்.
புயலின் தாக்கத்தால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே அத்தியாவசிய மருந்துகளையும், உணவு பொருட்களையும் போதிய அளவுக்கு இருப்பு வைக்குமாறு அமித் ஷா அறிவுறுத்தினார்.
புயல் கரையைக்கடக்கும் இடங்களில் இருக்கும் மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
Comments