தமிழகத்துக்கு ரெம்டெசிவிர் ஒதுக்கீட்டை 20 ஆயிரமாக உயர்த்திய மத்திய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்றி
தமிழகத்துக்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை அதிகரித்துள்ள மத்திய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு ஆக்சிஜன், தடுப்பு மருந்து, ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றின் ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரிப் பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை மத்திய அரசு 20 ஆயிரமாக உயர்த்தியுள்ளது.
இதற்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தனது வேண்டுகோளை ஏற்று ஒதுக்கீட்டை அதிகரித்திருப்பது கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவும், நோயாளிகளின் குடும்பத்தினர் மருந்து வாங்க வரிசையில் காத்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவரவும் உதவியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Comments