ஊரடங்கு காலங்களில் ரேசன் கடைகள் கூடுதலான நேரம் திறந்திருக்க வேண்டும் மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தல்
ஊரடங்கு காலங்களில் மாநில அரசுகள் ரேசன் கடைகளை கூடுதலான நேரம் திறந்திருக்க வேண்டும் என்று மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மாதத்தின் அனைத்து நாட்களிலும் ரேசன் கடைகளைத் திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமரின் உணவு விநியோகத் திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு இம்மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.
இவற்றை மக்கள் எந்தவித கூட்ட நெரிசலும் இல்லாமல் வாங்கிச் செல்ல காலை முதல் மாலை வரை கூடுதலான நேரத்துக்கு ரேசன் கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழக்கமான கடைகளுக்கு உள்ள கட்டுப்பாடுகள் ரேசன் கடைகளுக்குப் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments