டவ்-தே புயல் காரணமாக கடலுக்குள் எந்த உயிரிழப்பும் இல்லை-இந்திய கடலோர காவல்படை

0 1370
டவ் தே புயல் காரணமாக கடலுக்குள் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

டவ் தே புயல் காரணமாக கடலுக்குள் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கடலோர காவல்படை விடுத்துள்ள அறிக்கையில், லட்சத் தீவு, கேரளா, கர்நாடகா மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களை புயல் தாண்டியுள்ள நிலையில் தற்போது கடலோர காவல்படையினர் தற்போது மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடல் பகுதிகளைக் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 5 ஆயிரத்து 600 படகுகள் பத்திரமாக கரை திரும்பியுள்ளதாகவும், இதுவரை கடலுக்குள் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் கடலோர காவல்படை அறிக்கையில் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments