நாடு முழுவதும் 6000 ரயில்நிலையங்களில் இலவச வைஃபை வசதி-புதிய இலக்கை எட்டியது ரயில்வேத்துறை
நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வழங்கும் திட்டத்தில் 6 ஆயிரம் ரயில் நிலையங்கள் என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.
மும்பை ரயில் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் வைஃபை திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து முக்கிய ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டு வந்த வைஃபை இணைப்பு மேற்கு வங்கத்தில் உள்ள மிட்னாபூர் ரயில் நிலையத்தோடு 5 ஆயிரம் என்ற இலக்கை எட்டியது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் உள்ள ஜரபாடா நிலையத்திற்கும் வைஃபை வசதி வழங்கப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 6 ஆயிரம் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி என்ற புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
Comments