காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி ராஜீவ் சதாவ் காலமானார்
கொரோனா தொற்றிலிருந்து மீண்ட காங்கிரஸ் எம்பி ராஜீவ் சதாவ் திடீரென உயிரிழந்தார்.
அக்கட்சியின் மாநிலங்களவை எம்பியான ராஜீவ் சதாவ் கொரோனா தொற்று காரணமாக புனேவில் உள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் அடுத்த கட்ட சோதனையில் அவருக்கு பெருந்தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
ஆனாலும் திடீரென ராஜீவ் சதாவின் உடல்நிலை மோசமடைந்து நேற்று உயிரிழந்தார். ராஜீவ் சதாவின் மரணத்திற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Comments