முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் குழுவில் விஜயபாஸ்கர் உட்பட 13 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடம்..!
கொரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இடம் வழங்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த குழுவில், 13 கட்சிகளின் MLA - க்கள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர் . இக் குழுவில் திமுக சார்பில் மருத்துவர் எழிலன், காங்கிரஸ் சார்பில் A.M.முனிரத்தினம், பாமக சார்பில் G K மணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் MLA -க்களும் குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
Comments