மாநிலங்களுக்கு இதுவரை 20.28 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன :மத்திய அரசு தகவல்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இது வரை 20 கோடியே 28 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை வழங்கி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதில் ஒரு கோடியே 84 லட்சம் டோஸ்கள் இன்னும் மாநிலசங்களிடம் இருப்பு உள்ளன. அடுத்த 3 நாட்களில் மத்திய அரசு, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மேலும் 51 லட்சம் தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments