தமிழகத்தில் மழை வெள்ளப் பாதிப்பு குறித்து மாநிலத் தலைமைச் செயலருடன் மத்திய அமைச்சரவைச் செயலர் ஆலோசனை
தமிழகத்தில் மழை வெள்ளப் பாதிப்பு குறித்து மாநிலத் தலைமைச் செயலருடன் மத்திய அமைச்சரவைச் செயலர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையாலும் வெள்ளப்பெருக்காலும் எட்டாயிரம் ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் தலைமைச் செயலர் இறையன்புடன் மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கவுபா காணொலியில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கடலில் மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க மத்திய அரசின் உதவியைத் தமிழக அரசு கோரியது.
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழுவினர் ஆய்வு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
Comments