தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு..!

0 26430
தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு..!

காசா மீதான தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு எச்சரித்துள்ள நிலையில், இது குறித்து அவசரமாக ஆலோசிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீன ஹமாஸ் உள்ளிட்ட போராளி குழுக்களுக்கும் இடையேயான மோதல் 7 ஆவது நாளாக நீடிக்கிறது. ஜெருசலேமில் உள்ள மஸ்ஜிதுல் அக்சாவில் இருந்து பாலஸ்தீனியர்களை விரட்டிய இஸ்ரேல் ராணுவத்தின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டெல் அவிவ் மற்றும் பீர்ஷெபா (Beersheba) நகரங்களின் மீது ஹமாஸ் போராளிகள் ராக்கெட்டுகளை வீசினர்.

அதைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் காசா நிலப்பகுதி மீதி சரமாரியாக வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் 41 குழந்தைகள் உள்பட பாலஸ்தீனர்கள் 149 பேர் கொல்லப்பட்டனர்.

காசாவின் முக்கிய கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. பதிலுக்கு ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இன்று காலை காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் வீடு தரைமட்டமாக்கப்பட்டது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று காலை டெல் அவிவ் நகரை நோக்கி ஹமாசின் ராக்கெட்டுகள் பறந்தன.

இந்த நிலையில் தொலைக்காட்சியில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, காசா மீதான தாக்குதல் தொடரும் என கூறினார்.

ஆனால், ஹமாஸ் போலன்றி தாங்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என அவர் பேசினார். இதனிடையே, மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா. ஐ.நா மற்றும் எகிப்து தூதர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் எந்த பலனும் தராத நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவரசமாக கூடி நிலைமையை பற்றி விவாதிக்க உள்ளது.

இந்த மோதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மிகுந்த கவலை தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, பாலஸ்தீன் அதிபர் மகமூது அப்பாஸ் ஆகியோருடன் அவர் தொலை பேசியில் பேசினார். அப்போது ஹமாஸ் தனது தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் மகமூது அப்பாசிடம் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments