தனி ஒருவன் தரும் விழிப்புணர்வு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கொரோனா 2-வது அலையில் இருந்து மக்களை காக்க தன் சொந்த செலவில் டீ மாஸ்டர் ஒருவர் முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கி வருகிறார்.
உலகை ஆட்டிப்படைக்கும் கோர கொரோனாவுக்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. தன் 2-வது அலையை வீசி வரும் கொரோனா தமிழகத்தையும் பதம் பார்த்து வருகிறது.
புன்முறுவலுடன் முக மலர்ந்து காட்சி அளித்த பலரின் முகங்கள் இன்று முக கவசத்திற்குள் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
கொரோனா பேரலையில் இருந்து மக்களை காக்க பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் வந்தாலும் சாமானியனிடம் இருந்து கிடைக்கும் உதவி பேருதவியாகவே கருதப்படுகிறது.
அப்படி திருப்பரங்குன்றம் சோளங்குருணி கிராமத்தை சேர்ந்த 51 வயது டீ மாஸ்டர் ரவிச்சந்திரனின் பணியும் அளப்பறியது.
முகங்களை மூடி வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்களுக்கு மத்தியில் ரவிச்சந்திரன் தனி ஒரு ஆளாக தன் சொந்த அம்னி வேனில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்களை எடுத்துக் கொண்டு காலை மாலை என இரு வேளைகளில் மக்களுக்கு வழங்கியும், ஒலிபெருக்கி கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறார்.
போலீசார் உதவியுடன் சாலைகளில் உலா வரும் வாகன ஓட்டிகளை பிடித்து முக கவசம் அணிவதன் அவசியம் மற்றும் பாதுகாப்பு நலன்கள் குறித்து போதனை செய்து வருகிறார் இந்த தனி ஒருவன்...
Comments