சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நாசா வெளியிட்ட புதிய விண்மீன் கூட்ட புகைப்படம்
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்ட புதிய விண்மீன் கூட்டத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள விளக்க குறிப்பில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தில் பால்வெளி அண்டம் மட்டுமே இருக்கிறது என்று விண்வெளி ஆய்வாளர்கள் நம்பிக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளது.
ஆனால் இப்போது பால்வெளி அண்டத்தை தாண்டி ஏராளமான விண்மீன் கூட்டங்களை நவீன தொலைநோக்கிகள் மூலம் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, ‘ஏபெல்3827' என்ற மிகப்பெரிய விண்மீன் கூட்டத்தை படம் பிடித்திருக்கிறது என்றும் இந்த புகைப்படம் பிரபஞ்ச விண்மீன் கூட்டங்கள் குறித்த விரிவான ஆய்வுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
Comments