மத்தியப்பிரதேசத்தில் 90மில்லி கொண்ட மது பாட்டில் விரைவில் அறிமுகம்
மத்தியப்பிரதேசத்தில் மதுப் பிரியர்களுக்காக குறைந்த விலையில் வெறும் 90 மில்லி அளவு கொண்ட மது பாட்டில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இனி மது உற்பத்தி நிறுவனங்கள் 10 சதவீதம் ‘குறைந்த மில்லி அளவு கொண்ட மதுபாட்டில் தயாரித்து வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வருகிற ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
Comments