பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை - டெல்லி அமைச்சரவை ஒப்புதல்

0 3054
பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை - டெல்லி அமைச்சரவை ஒப்புதல்

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் முடிவுக்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலையில் ஏற்பட்டுள்ள பேரழிவு நிலையில் டெல்லியில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இதனால் அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேட்ஜ் வைத்திருப்பவர்களும், ஒரு லட்சத்து 90 ஆயிரம் பெர்மிட் ஓட்டுநர்களும் அடங்குவர். அரசு வழங்கும் இந்தத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments