புயல் மழையால் மக்கள் முடங்கினர் -கடலோர வீடுகள் இடிந்தன

0 3468
அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள டவ்-தே புயல் காரணமாக, கடலோர மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கரையோர வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மரங்களும் வேரோடு சாய்ந்தன.

அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள டவ்-தே புயல் காரணமாக, கடலோர மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கரையோர வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மரங்களும் வேரோடு சாய்ந்தன. 

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள உப்பலா முசோடி எனுமிடத்தில் கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படுகிறது. கரையோரத்தில் இருந்த சில வீடுகள் இடிந்து விழுந்தன.

திருவனந்தபுரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படுகிறது. பேரலைகள் எழுந்து கரையைத் தொடுகின்றன. சண்முகம் கடற்கரையை ஒட்டிய சாலைகள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளன.

பல இடங்களில் வீடுகள் மரங்கள் சாய்ந்து பெருத்த சேதம் உண்டாக்கியுள்ளது இந்த புயல். தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் நிவாரண முகாம்களுக்கும் பாதுகாப்பான வேறுஇடங்களுக்கும் இடம் மாற்றப்பட்டு வருகின்றனர். மீட்புப் படைகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதே போல கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் டாவ் தே புயலின் கோரத் தாண்டவம் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மும்பைக்கு இந்த மாத இறுதியில் மழைக்காலம் தொடங்க உள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக இப்போதே மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் பலத்த மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.

மும்பையின் பாந்த்ரா, ஜூஹூ கடற்கரையில் பலத்த மழை பெய்தது.ஏற்கனவே ஊரடங்கால் முடங்கிய மக்கள் காய்கறி வாங்கக்கூட வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments